• இலங்கையின் மிகப் பெரிய தேசிய கொள்கைக் களஞ்சியம்
  • இலங்கையின் முதல் SCP மின் கற்றல் வசதி

நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தி (SCP) பற்றிய இலங்கைக்கான தேசியக் கொள்கை


இலங்கைக்கான சுவிட்ச் ஏசியா (SWITCH-Asia) நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தித் தேசிய கொள்கை ஆதரவுப் பாகம் (NPSC) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, AETS - Application Européenne de Technologies et de Services தலைமையிலான ஒரு சர்வதேச கூட்டமைப்புடன் ஒன்றாக இணைந்து அமுலாக்கப் படுகின்றது. இலங்கை அரசாங்கம் நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்திக் கொள்கைகளை குறிப்பிடப்பட்ட மாதிரிகள் மூலம் துணிவூட்டி ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வழங்குவதுடன் இம்முயற்சிக்கான நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகின்றது. நுகர்வு மற்றும் உற்பத்தி வடிவமைப்புகளின் நெடுங்கால நிலைப்பாட்டை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்திக் கொள்கைகளை (SCP ) ஊக்குவிப்பதற்கான தகுதிவாய்ந்த பொருளாதார மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைக் கருவிகளை தெரிவு செய்தல், பொருத்தமாக்கல் மற்றும் அமுலாக்கல் ஆகிய கருமங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதே இத் தேசிய கொள்கை ஆதரவுப் பாகத் திட்டத்தி ன் (NPSC ) குறிக்கோளாகும்.


நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தி (SCP) என்றால் என்ன?

எளிதாக SCP என்பது நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தி என்பதாகும். தொழில் துறைகளினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகள் மற்றும் சேவைகளை நாம் தினசரி விலைக்கு வாங்குகிறோம். இத் தயாரிப்புகளின், விலைக்கு வாங்குதல் மற்றும் உற்பத்திப் பாவனை எனும் சுழற்சி முறையை பசுமைப் படுத்த SCP முனைகின்றது.

மேலும் படித்தறியுங்கள்


இலங்கைக்கு ஏன் SCP கொள்கைகள்?


சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கும் போது, இயற்கை வளங்கள் பாவனை, அமில வாயு (CO2) வெளிப்படுத்தல் ஆகிய இரண்டையும் குறைப்பதற்கு, சமூகங்களில், உலகளாவிய ரீதியில் அதிக நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தி (SCP) முறைமைகளைக் கையாளப்படல் வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளை வடிவமைத்தல் , உற்பத்தி செய்தல், உபயோகித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகிய கருமங்களை மிகுந்த சூழல் சிநேகித மற்றும் சமூக ரீதியில் நியாயமான முறைகளில் மேற்கொள்வது பற்றி SCP முக்கிய கவனம் செலுத்துகின்றது. SCP யின் உபாய முறைகளினால் செயல் திறன்களை மேம்படுத்த முடியுமாவதுடன் அதன் பிரகாரம் தொழில் துறைகள் வளங்களைப் பாவிப்பதன் மூலம் மக்களின் நுகர்வு முறைமைகளை மாற்றியமைக்க உதவி அவர்களுக்கு கோள் கிரகத்தின் எல்லைகளுக்குள் வாழ வழி செய்யும். மறைமுகமாக நுகர்வு மற்றும் உற்பத்தி முறைமைகள் வறுமையைப் போக்க வழி செய்து சமூக பாதுகாப்புக்கும் அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகளுக்கும் அணுக உதவும். SCP அணுகுமுறை வாழ்க்கை சுற்று சிந்தனையை பயன்படுத்துவதுடன் அது நுகர்வு மற்றும் உற்பத்தி முறைமைகள் சம்பந்தப்பட்ட எல்லா வாழ்க்கை சுற்று கட்டங்களினதும் விளைவுகளைக் கவனத்தில் கொள்ளும்.

இத்திட்டம் பசுமைப் பெறுகை, வாழ்க்கை சுற்றுச் சிந்தனை, சூழலியல் அடையாளப் படுத்தல் மற்றும் சூழலியல் புதுமைப் படுத்தல் போன்ற SCP கருவிகளைப் பயன்படுத்தும். அத்தோடு இத்திட்டம் நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தியை உயர்த்துவதற்கான நிதி அமைப்புகளையும் அறிமுகப் படுத்தும்.


முக்கிய திட்டக் கூறுகள்


தேசிய நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்திக் (SCP) கொள்கை

தற்போதுள்ள SCP கொள்கைகள் மற்றும் நிறுவன செயல் முறைகளை மீளாய்வு செய்தல். அமைச்சுகளுகிடையிலான கலந்தாலோசனை மற்றும் ஆற்றல் அபிவிருத்தி மூலமாக தேசிய SCP கொள்கைக் கட்டமைப்பை நகல் ஒன்றை உருவாக்குதல்

மேலும் படித்தறியுங்கள்

நிலைப்பாடான உற்பத்தி

இக்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் நிலைப்பாடான உற்பத்தி கொள்கைக் கட்டமைப்பு மற்றும் நிலைப்பாடான உற்பத்தி மூலக் கோற்பாடு என்பனவற்றை செயல் படுத்துவதை வளர்க்கும்.

மேலும் படித்தறியுங்கள்

நிலைப்பாடான நுகர்வு

இக்கூறு பசுமைப் பொதுப் பெறுகை, சூழலியல் அடையாளப் படுத்தல் பற்றிய கொள்கைகள் மற்றும் புதுமையான அணுகு முறைகள் என்பனவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நிலைப்பாடான நுகர்வுக் கட்டமைப்பை வளர்க்க உதவி செய்யும்.

மேலும் படித்தறியுங்கள்

SCP விழிப்புணர்வு

இக்கூறு, மிகக் கூடிய வெளிக்கள பரப்புரை விரிவுக்கான நேரடி அறிவு மற்றும் மின் கற்கை என்பனவற்றை உட்கொண்ட SCP விழிப்புணர்வை உயர்த்துதல் மற்றும் SCP கல்வித் திட்டங்களை விருத்தி செய்யும்.

மேலும் படித்தறியுங்கள்


மேலும் தெரிந்து கொள்ள


அறிவுத் தரவுத் தளம்

பிரசுரங்கள், காணொளி, கொள்கை ஆவணங்கள் உட்பட்ட நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பான பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

வருகை தருக

மின் கற்கை

நிலைப்பாடான நுகர்வு மற்றும் உற்பத்தி பற்றி மேலதிக கற்கைகளை விரும்பும் பார்வையாளர்களுக்கு பெறுமதிமிக்க உள்ளடக்கங்கள், சுறுசுறுப்பான திரைகள் ஊடாடும் சோதனைகள் என்பனவற்றின் ஒரு கலவையை உள்ளடக்கியுள்ளது.

வருகை தருக

செய்திமடல்

சுவிட்ச்-ஏசியா (SWITCH-Asia) SCP NPSC திட்டத்தின் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது.

SCP செய்தி புதுப்பித்தல்களுக்காக பதிவு பெறுங்கள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்


Read More

Meeting of the voluntary committee on IAEWG

Read More

National Environmental Action Plan (NEAP) 2022-2030

Read More

SCP Forum (IAEWG) Meeting (6th Meeting)

Read More

Sri Lanka SCP Multi-stakeholder Consultation

Read More

Workshop for developing Water Sector Green Accounts for Sri Lanka

Read More

Presidential Environment Awards-2019 for National Green Reporting System of Sri Lanka

Read More

National Policy on Sustainable Consumption and Production

Read More

Completion of e learning course on Sustainable Consumption and Production

Read More

Test news